இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும்தான் வளமான காமிக்ஸ் மரபு இருக்கிறது. ஐரோப்பாவில் வெளியாகும் மிக அற்புதமான காமிக்ஸ்களை எல்லாம் தாய்மொழியிலேயே படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள். இந்தப் பெருமை எல்லாம் ஐரோப்பிய காமிக்ஸ்களைத் தொடர்ந்து தமிழில் வெளியிட்டுவரும் லயன், முத்து காமிக்ஸ் இதழ்களையும் அதன் ஆசிரியர் எஸ். விஜயனை மட்டுமே சாரும்.
ஐரோப்பாவிலும் தமிழிலும் மிகப் பரிச்சயமான பல பிரபல நாயகர்களின் வரலாற்றை விவரிப்பதுதான் இந்தப் வலைபதிவின் நோக்கம். பெரும்பாலும் இணையத்திலிருந்தே தகவல்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றைத் தொகுத்து, தமிழில் தருவது மட்டுமே எனது வேலை. குற்றம், குறைகள் இருப்பின் உடனடியாகச் சுட்டிக்காட்டுங்கள். கட்டுரைகளை மேம்படுத்த அவை உதவும். இந்தத் தொடரில் முதலில் வரவிருப்பது இத்தாலிய காமிக்ஸ் உலகின் காவிய நாயகனான டெக்ஸ் வில்லரின் சரித்திரம்.
பெப்ரவரி 5, 2007
பெப்ரவரி 6, 2007 at 5:26 பிற்பகல்
முதலில் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
முதல் வரியில் நீங்கள் சொல்லியிருப்பது ஒரு கேள்வியை எழுப்புகிறது. தமிழ் காமிக்ஸ் எல்லாமே மொழிபெயர்ப்புகளாக இருக்கும்போது – அவை தரமாக இருந்தாலும் – தமிழ் காமிக்ஸ் மரபு வளமானது என்று சொல்லலாமா?
Best of luck!
பெப்ரவரி 6, 2007 at 6:00 பிற்பகல்
மற்ற இந்திய மொழிகளில் இதுகூட இல்லை என்று என்னும்போது என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியதில் வந்த வார்த்தைகள் அவை. என்ன இருந்தாலும் தமில் மொளி தமில் மொளிதான்.
பெப்ரவரி 7, 2007 at 5:30 மு.பகல்
அது என்னவோ கரெக்ட்டுதான்.
பெப்ரவரி 27, 2007 at 4:53 மு.பகல்
தமிழ் காமிக்ஸ் மரபு மொழிபெயர்ப்பு சார்ந்ததாக இருந்தாலும், அது தமிழ் காமிக்ஸ் மரபுதான். அழிவு, கொள்ளை, தீமைக் கழகத்திடம் சாத்தானை பிடித்துக்கொடுத்துவிடவேண்டும் என நினைக்கிறேன். கம்ப ராமாயணம் தமிழ் இலக்கியம்தானே அய்யா? மென்மயிர்த்தோல் கோட்டு போன்ற அற்புதமான மொழிபெயர்ப்புகள் ருஷ்ய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தமிழ்ச் சொற்களாகவே இனிக்கின்றன.
மார்ச் 1, 2007 at 7:16 பிற்பகல்
செந்திலாளரே, பசிய வளை முகடை விட்டுவிட்டீர்களே!
மே 24, 2007 at 7:41 மு.பகல்
நண்பரே!
தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை ஒருங்கிணைத்து காமிக்ஸ் உலகம் குறித்தான ஒரு குழுப்பதிவு அமைக்கும் திட்டம் இருக்கிறது. இணைய விரும்பும் காமிக்ஸ் ரசிகர்கள் luckylook32@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்!
ஜூலை 17, 2007 at 11:06 மு.பகல்
ஆமாம்…காமிக்ஸ் உலகம் என்ற பெயரில் ஆரம்பித்துள்ளோம்…
நீங்கள் உங்கள் மின்னஞ்சல் தாருங்கள், உங்களை அழைக்கிறோம்…
http://tamilcomic.blogspot.com/
பெப்ரவரி 22, 2008 at 11:47 மு.பகல்
ஆமாம், இந்த காமிக்ஸ் உலகம் என்ன ஆயி்ற்று?
அக்டோபர் 4, 2008 at 12:51 பிற்பகல்
Why no more updates?
அக்டோபர் 8, 2008 at 1:26 பிற்பகல்
மன்னிக்க வேண்டும் விஸ்வா. வேலைப் பழுவில் செய்ய முடியாமல் போய்விடுகிறது. தொடரவே உத்தேசித்திருக்கிறேன்