இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும்தான் வளமான காமிக்ஸ் மரபு இருக்கிறது. ஐரோப்பாவில் வெளியாகும் மிக அற்புதமான காமிக்ஸ்களை எல்லாம் தாய்மொழியிலேயே படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள். இந்தப் பெருமை எல்லாம் ஐரோப்பிய காமிக்ஸ்களைத் தொடர்ந்து தமிழில் வெளியிட்டுவரும் லயன், முத்து காமிக்ஸ் இதழ்களையும் அதன் ஆசிரியர் எஸ். விஜயனை மட்டுமே சாரும்.
ஐரோப்பாவிலும் தமிழிலும் மிகப் பரிச்சயமான பல பிரபல நாயகர்களின் வரலாற்றை விவரிப்பதுதான் இந்தப் வலைபதிவின் நோக்கம். பெரும்பாலும் இணையத்திலிருந்தே தகவல்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றைத் தொகுத்து, தமிழில் தருவது மட்டுமே எனது வேலை. குற்றம், குறைகள் இருப்பின் உடனடியாகச் சுட்டிக்காட்டுங்கள். கட்டுரைகளை மேம்படுத்த அவை உதவும். இந்தத் தொடரில் முதலில் வரவிருப்பது இத்தாலிய காமிக்ஸ் உலகின் காவிய நாயகனான டெக்ஸ் வில்லரின் சரித்திரம்.
பிப்ரவரி 2007
Monthly Archive
பிப்ரவரி 5, 2007
Advertisements